தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணதிற்கு கிழக்கே ஆறு கிலோ மீட்டர் தொலைவில் அமைத்துள்ள திருநாகேஸ்வரம் இராகு பகவான் சிவபெருமானை பூஜித்த திருத்தலமாகும். நாக அரசராகிய இராகு பூஜித்தமையால்தான் இத்தலத்திற்கு திருநாகேஸ்வரம் என்ற பெயர் வந்தது. தமிழகத்தில் நவக்கிரக தலங்களில் எட்டாவது கிரகமான இராகுபகவான் திருநாகேஸ்வரம் அருள்மிகு நாகநாத சுவாமி திருக்கோயில் வெளிப்பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் இராகு பகவான் தனது இருதேவியருடன் எழுந்தருளியுள்ளார். புராண வரலாற்றின்படி இத்தலத்தில் இராகு பகவான் நாகநாத சுவாமியை வழிபட்டதோடு, இத்தலத்தில் தன்னையும் வழிபடுவாேர்க்கு பல நலன்களையும் அருளும் வரமும் பெற்று திகழ்கின்றார்
06:00 AM IST - 01:00 PM IST | |
04:00 PM IST - 09:00 PM IST | |
01:00 PM IST - 04:00 PM IST | |
காலை 6.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு மதியம் 1.00 மணிக்கு நடை சாற்றப்படும் மாலை 4.00 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு இரவு 9.00 மணிக்கு நடை சாற்றப்படும். இராகு கால நேரங்களில் நடை திறந்திருக்கும், தனுர்(மார்கழி) மாதத்தில் மட்டும காலை 5.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு மதியம் 12.30 மணிக்கு நடை சாற்றப்படும். மாலை 4.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8.30 மணிக்கு நடை சாற்றப்படும். விழா காலங்களில் நேரம் மாறுதலுக்குட்பட்டது |